SBI Recruitment 2025: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள 996 Specialist Cadre Officer (SCO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் வருகின்ற 02.01.2026 (கடைசி தேதி நீட்டிப்பு) தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இப்போது பார்க்கலாம்.
EducationalSBI Recruitment 2025
Type / to choose a block
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
| துறைகள் | பாரத ஸ்டேட் வங்கி State Bank of India |
| காலியிடங்கள் | 996 |
| பணிகள் | Specialist Cadre Officer (SCO) |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 02.01.2026 (கடைசி தேதி நீட்டிப்பு) |
| பணியிடம் | தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://sbi.co.in/ |
SBI Recruitment 2025 காலியிடங்கள் விவரம்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியின் Specialist Cadre Officers (SCO) பிரிவின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள VP Wealth (SRM), AVP Wealth (RM), மற்றும் Customer Relationship Executive பதவிகளுக்கான முழுமையான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தற்போதைய காலியிடங்கள் (Current Job Openings)
| பதவியின் பெயர் (Post Name) | காலியிடங்கள் (Number of Posts) |
| VP Wealth (SRM) | 506 |
| AVP Wealth (RM) | 206 |
| Customer Relationship Executive (வாடிக்கையாளர் உறவு நிர்வாகி) | 284 |
| மொத்த காலியிடங்கள் |
State Bank of India Recruitment 2025 கல்வித் தகுதி
| பதவியின் பெயர் (Post Name) | கல்வித் தகுதி (Educational Qualification) |
| VP Wealth (SRM) | அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் பட்டப்படிப்பு Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
| AVP Wealth (RM) | அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் பட்டப்படிப்பு Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
| Customer Relationship Executive (வாடிக்கையாளர் உறவு நிர்வாகி) | அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் பட்டப்படிப்பு Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியனுபவம் தேவை இல்லைSBI Specialist Officer Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள் |
SBI Specialist Officer Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
| பதவியின் பெயர் | வயது வரம்பு |
| VP Wealth (SRM) | 26 வயது முதல் 42 வயது வரை |
| AVP Wealth (RM) | 26 வயது முதல் 35 வயது வரை |
| Customer Relationship Executive (வாடிக்கையாளர் உறவு நிர்வாகி) | 26 வயது முதல் 35 வயது வரை |
அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு (Relaxation of Upper Age Limit)
| வயது வரம்பின் தளர்வு | தளர்வு (ஆண்டுகள்) |
| SC/ST விண்ணப்பதாரர்கள் | 5 ஆண்டுகள் |
| OBC விண்ணப்பதாரர்கள் | 3 ஆண்டுகள் |
| PwBD (Gen/EWS) விண்ணப்பதாரர்கள் | 10 ஆண்டுகள் |
| PwBD (SC/ST) விண்ணப்பதாரர்கள் | 15 ஆண்டுகள் |
| PwBD (OBC) விண்ணப்பதாரர்கள் | 13 ஆண்டுகள் |
| முன்னாள் இராணுவத்தினர் விண்ணப்பதாரர்கள் (Ex-Servicemen) | அரசின் கொள்கைப்படி தளர்வு அளிக்கப்படும் |
SBI Recruitment 2025 சம்பள விவரங்கள்
| பதவியின் பெயர் (Post Name) | ஆண்டுக்கு அதிகபட்ச CTC (Maximum CTC per annum) |
| VP Wealth (SRM) | Rs. 44.70 Lakhs |
| AVP Wealth (RM) | Rs. 30.20 Lakhs |
| Customer Relationship Executive (வாடிக்கையாளர் உறவு நிர்வாகி) | Rs. 6.20 Lakhs |
SBI Recruitment 2025 தேர்வு செயல்முறை
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியின் Specialist Cadre Officer (SCO) பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ள செயல்முறையின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- குறுக்குப்பட்டியலிடல் (Shortlisting): விண்ணப்பதாரர்கள் அவர்களின் கல்வித் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் வங்கி நிர்ணயிக்கும் அளவுகோல்களின்படி குறுக்குப்பட்டியலிடப்படுவார்கள். போதுமான எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களை நேர்காணலுக்கு அழைப்பது வங்கியின் முடிவுக்கு உட்பட்டது.
- நேர்காணல் (Interview): குறுக்குப்பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தனிப்பட்ட/தொலைபேசி/வீடியோ நேர்காணல் நடத்தப்படும்.
- இறுதித் தேர்வு (Final Selection): நேர்காணலில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே இறுதி தகுதிப் பட்டியல் (Final Merit List) தயாரிக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள்.
SBI Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்
- ST/SC//PWD விண்ணப்பதாரர்களுக்கு – இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.750/-
- கட்டண முறை: ஆன்லைன்
முக்கிய தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 02.12.2025
- ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 02.01.2026 (கடைசி தேதி நீட்டிப்பு)
SBI Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது?
எஸ்பிஐ வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 02.12.2025 முதல் 02.01.2026 (கடைசி தேதி நீட்டிப்பு) தேதிக்குள் https://sbi.co.in/ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
